அன்று வெள்ளிக்கிழமை! பிற்பகல் இரண்டரை மணி! அந்த மருத்துவமனையின் மகப்பேறுப் பிரிவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது!
மூடப்பட்ட பிரசவ அறையின் வெளியே தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் மனோபாவத்தோடு ஒரு இளைஞன் நின்றிருந்தான்!
பிரசவ
அறைக்குள்ளிருந்து குவா! குவா! என்ற சத்தம் கேட்டு அவன் முகத்தில்
மகிழ்ச்சி ஊற்றெடுத்தது! சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து வெளியே வந்த
செவிலி, அங்கு நின்றிருந்த இளைஞனைப் பார்த்து, "வாழ்த்துக்கள்! உங்களுக்கு
பெண்குழந்தை பிறந்திருக்கு! உங்க மனைவி நல்லா இருக்காங்க! கொஞ்ச நேரத்தில
குழந்தையையும் உங்க மனைவியையும் தனியறைக்கு மாத்திடுவோம்! அப்றமா நீங்க
வந்து பாக்கலாம்!" என்றுவிட்டுப் போனாள்.
அவன்
மனதின் மகிழ்ச்சியும் நிம்மதியும் முகத்தில் தெரிந்தது! கண்களில் மெல்லிய
நீர்ப்படலத்துடன் கைகளை கூப்பி தலையை தூக்கி மேலே பார்த்து வணங்கிக்
கொண்டான்.
சிறிது
நேரத்தில் பிரசவ அறையின் கதவுகள் திறக்கப்பட, பிரசவம் பார்த்த பெண்
மருத்துவர் முன்னால் வர, பிரவித்த பெண்ணையும் பிறந்த அந்த பச்சைக்
குழந்தையையும் வேறு அறைக்கு மாற்றுவதற்காக பின்னால் அழைத்து வந்தனர்.
அந்த
மருத்துவரைப் பார்த்து இன்னும் துடைக்காத கண்களுடன், "ரொம்ப தேங்க்ஸ்
டாக்டர்! எனக்கு குழந்தையே பிறக்காதோன்னு பயந்துகிட்டிருக்கும் போது,
தெய்வம் மாதிரி எங்களுக்கு உதவி பண்ணியிருக்கீங்க!" என்று அந்த
மருத்துவச்சியைக் கும்பிட்டான். மருத்துவச்சியின் முகத்தில் பெருமிதம்!
அவன்
தன் மனைவியின் பின்னாலேயே செல்ல, தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள் அந்த
மருத்துவச்சி! மிகவும் தளர்வாக நாற்காலியில் பொத்தென அமர்ந்தாள். அவளுடைய
பணிப் பெண் அவளுக்கு குடிக்க பழச்சாறு அடங்கிய கண்ணாடிக் கோப்பையை எடுத்து
வந்து கொடுக்க, அதை வாங்கி மெதுவாக உறிஞ்சினாள்.
அவளுடைய
கைப்பேசி ஔிர்ந்தது. அலட்சியமாக அதை எடுத்தாள். ஏற்கனவே ஏழெட்டு
ஏற்கப்படாத அழைப்புகள். எல்லாமே அவளுடைய கணவனிடமிருந்துதான். இப்போதும்
அவனேதான் அழைத்தான். இந்நேரத்துக்கு இவர் கூப்பிட மாட்டாரே! என்று
நினைத்தபடி அதை உயிர்ப்பித்து தன் காதுக்கு கொடுத்தாள்.
அவன் கூறிய செய்தியில் இடிந்து போனவளாக, "ம்! சரி!" என்றாள்.
திரும்பவும் அவன் என்ன சொன்னானோ, இவள், "உடனே வரேங்க!" என்றுவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.
கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் அரக்கப் பறக்கக் கிளம்பினாள். ஏதோ கேட்க வந்த செவிலியிடம்,
"வேற
டாக்டர வெச்சி பாத்துக்கோம்மா! நான் அவசரமா கௌம்பறேன்!" என்று
ஆங்கிலத்தில் கடகடவென மொழிந்துவிட்டு மற்றவர்கள் அவளை வியப்புடன் பார்க்க,
அவள் கிட்டத்தட்ட ஓடினாள்.
Then......
Click on the flower to read the remaining story!
Hope you enjoy the story! Please leave your comments in the comments box for me to improve, friends!
********
No comments:
Post a Comment